டேய் எவன்டா துப்புனது ஒழுங்கா ஒத்துக்கோ.. எச்சில் துப்பியதால் பேருந்தை மறித்து ரகளை..!
Author: Vignesh9 July 2024, 4:06 pm
வேடசந்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தனியார் பேருந்தில் சென்ற அடையாளம் தெரியாத பயணி பான் பராக் போட்டு எச்சில் துப்பியதால் பேருந்தை மறித்து ரகளை செய்த இளைஞர்களால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் – பழனியில் இருந்து கரூர் மார்க்கமாக பெங்களூர் நோக்கி சென்ற Royal Traves ஆம்னி பேருந்திலிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது பான் பராக் போட்டு எச்சிலை துப்பியதாக கூறப்படுகிறது.
அந்த இளைஞர் தலையில் எச்சில் விழுந்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நண்பர்களோடு ஆத்து மேடு ஜங்ஷனில் பேருந்தை வழி மறித்தனர். பேருந்தை மறித்த இளைஞர்கள் யாருடா எச்சிலை துப்பியது மரியாதையாக இறங்கி வாங்க இல்லையென்றால், இந்த பேருந்து இங்கிருந்து நகராது என்று பேருந்தை மறித்து அரை மணி நேரமாக ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு விரைந்து வந்த போலீசார் என்னப்பா பிரச்சனை ஏன் பேருந்தை மறிக்கின்றீர்கள் என்று கேட்க சார் நான் பைக்ல வரும்போது என் மீது எச்சிலை துப்பிட்டாங்க யாருன்னு கேட்டா யாருமே கீழ வர மாட்றாங்க என்று அந்த இளைஞர் சொல்ல அங்கு வந்த போலீசார் பேருந்தில் ஏறி யாராவது எச்சில் துப்பி இருந்தா சொல்லிருங்க எனக் கேட்கயாருமே வாய் திறக்கவில்லை பேருந்திலிருந்த சில ஆண்களை வாயை காட்டுங்க என்று பார்த்தபோது எல்லா வாயுமே பான்பராக் போட்டது போல் இருந்ததால் யாராவது துப்பியிருந்தால் ஒத்துக்கோங்க மன்னிப்பு கேளுங்க என கூற யாருமே வாய் திறக்கவில்லை பின்பு அங்கிருந்த இளைஞர்களிடம் பேசி சமாதான படுத்திய போலீசார் பேருந்தை அனுப்பி வைத்தனர்.
மேலும் கடைசிவரை எச்சில் துப்பியவன் யார் என்று தெரியாமலே இளைஞர்கள் ஏமாற்றத்துடன் கலலைந்து சென்றனர். மேலும் பேருந்தில் பிரச்சினை நடக்கிறது என்று கூட கண்டுக்காமல் ஓட்டுநர் அமர்ந்து செல்போனில்ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடதக்கது. இச்சம்பவத்தால் வேடசந்தூர் ஆத்து மேடு பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.