இப்படியும் ஒரு மரணமா? சாலையை கடக்க முயன்ற பெண்… நின்று கொண்டிருந்த பேருந்து : மனதை நொறுக்கிய காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2023, 1:41 pm
கேரளா மாநிலம் கொச்சி களமசேரியைச் சேர்ந்த 43 வயதுடைய லட்சுமி என்ற பெண் இன்று காலை எர்ணாகுளம் லிசி சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது ஒரு முனையில் இருந்து மறுமுனையில் உள்ள சாலையை கடந்து செல்லும் போது, சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிய பேருந்து நின்றிருந்த நிலையில், பேருந்தின் முன் பெண் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனர் பெண்செல்வதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால் பேருத்தில் மோதி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் அவர் மீதி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
தற்பொழுது இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது