‘வெறும் போர்டு மட்டும்தான்.. கேமரா ஏதுமில்ல’: இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு.. நிர்வாகத்தின் அலட்சியத்தால் அழியும் நொய்யல் ஆறு!!

Author: Babu Lakshmanan
18 November 2022, 4:44 pm

கோவை ; கோவை புறநகர் பகுதியான கருமத்தம்பட்டியில் நொய்யல் ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

coimbatore

சூலூரை அடுத்துள்ள கோவை, திருப்பூர் நடுவே அமைந்துள்ள எல்லைப் பகுதியில் நொய்யல் ஆறு பாய்ந்தோடுகிறது. கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொய்யல் ஆற்றின் அருகே கோழி, ஆடு, மாடு மற்றும் மீன் இறைச்சி போன்ற கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதில் கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியான சோமனூர் பேருந்து நிலையத்தில் அருகில் காய்கறி சந்தையான புதன் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டம் அலைமோதி வருகின்றது. இதையடுத்து, இறைச்சி மற்றும் காய்கறி வியாபாரிகள் தங்களது வியாபாரம் முடிந்த பின்பு, அனைத்து கழிவுகளையும் நொய்யல் ஆறு மற்றும் ஊஞ்சபாளையம் சாலை ரயில்வே பாலத்தின் முன்பும் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமில்லாமல், ஈ, கொசுக்கள், பூச்சி, புழுக்கள் அதிகம் பரவி, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாய சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.

இதனை உடனே தடுத்து நிறுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். இதில், நகராட்சி நிர்வாகம், ‘எச்சரிக்கை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது,’ என்று விளம்பர பலகை அப்பகுதியில் வைத்திருக்கின்றனர். கண்காணிப்பு கேமரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai pallavi Ignore Thandel Promotions Event சாய் பல்லவிக்கு திடீர் உடல்நலக்குறைவு : சினிமாவை விட்டு விலக முடிவு!