தடுப்பூசி போடுவதால் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பலாம்? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 1:21 pm

விழுப்புரம் : ஞாயிற்று கிழமை மற்றும் இரவு நேர ஊரடங்கின் கட்டுபாடுகளால் நோய் தொற்று பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பில் இருந்து குறைந்துள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரனோ மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிகச்சைகள் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுகாதார துறை செயலர் முன்னிலையில் கொரோனா தடுப்பு செலுத்தும் மையத்தில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொண்டார்

.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகள் மற்றும் இரவு நேர ஊரடங்கின் கட்டுபாடுகளால் பன்மடங்கு அதிகரிப்பில் இருந்து குறைந்துள்ளதாகவும், வரக்கூடிய
இரண்டு வாரங்கள் மிக முக்கியமானது என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போதும் கட்டாயம் அனைவரும் முகம்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது,சானிடைசர் போன்றவை பயன்படுத்துவது போன்றவைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவிட் பாதிப்பில் அதிக நுரையீரல் தொற்றால் உயிரிழப்பு இருந்த நிலையில் மூன்றாவது அலையான உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பில் தடுப்பூசி செலுத்து கொள்வதால் நுரையீரல் பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன் மூன்றாவது அலையில் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசி 89.68 சதவிகிதமும், இரண்டாவது தவனை தடுப்பூசியை 66.95 சதவிகிதம் பேர் போட்டுகொண்டுள்ளதாகவும், 98.3 லட்சம் பேர் இரண்டாம் தவனை தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் உள்ளதால் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் பலபேர் ஒரு சடங்குக்காகவே மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய அவர் கொரனோ நோய் பாதிப்புக்குள்ளான  2 லட்சம் பேர் மருத்துவக் கண்காணிப்பில் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெற்று வருவதாகவும், திருமணங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நோய்த்தொற்றை குறைக்கலாம் என கூறினார்.

  • Vijay Confirms Love with Actress திருமணத்தில் இணையும் அடுத்த நட்சத்திர ஜோடி… தீயாய் பரவும் தகவல்..!!
  • Views: - 4706

    0

    0