உடல்நலம் தேறிய புலி.. 9 மாதங்களுக்கு பின் புதிய கூண்டில் உற்சாகம்.. கம்பீரமாய் நடந்து வரும் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2022, 6:38 pm

கோவை : வால்பாறை மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்ட புலிக்கு ரூ. 75 லட்சம் செலவில் புதிய கூண்டு வைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு முத்து முடி பகுதியில் உடல்நலக்குறைவாக பிடிக்கப்பட்ட ஆண் புலியை வனத்துறையினர் கடந்த 9 மாதங்களாக பாதுகாத்து தற்போது நல்ல நிலையில் உள்ளது.

இதையடுத்து தமிழக அரசு ரூபாய் 75 லட்சம் செலவில் புதிய கூண்டு அமைக்கப்பட்டு தற்போது TD ராமசுப்பிரமணியம், DFO கணேஷ், ACF செல்வம் தலைமையில் மானாம்பள்ளி வனப்பகுதியில் வால்பாறை மானாம்பள்ளி டாப்சிலிப் வனச்சரக மணிகண்டன், வெங்கடேஷ், காசிலிங்கம் மற்றும் மருத்துவர் ரமேஷ், மனோகரன், களக்காடு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் புலிக்கு மயக்க மருந்து செலுத்தி அதன் பின்னர் புதியதாக அமைக்கப்பட்ட புதிய கூண்டிற்கு எடுத்து வரப்பட்டு கூண்டில் விடப்பட்டது.

அக் கூடாரத்தின் சிறப்பு அம்சமான ஓய்வு அறை தண்ணீர் தொட்டி படுக்கை மரக் கூடாரம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் தீவிர கண்காணிக்கப்பட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தற்போது சிறு குட்டியான ஆண் புலி தற்போது 144 கிலோ எடை உள்ளது. இதில் அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் வேட்டை தடுப்பு APW ATR வேட்டை தடுப்பு காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் புலிகள் சிறப்பு ஆர்வலர் ரமேஷ் அனுபவம் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 943

    0

    0