ரேடியோவில் சத்தமாக பாட்டு கேட்ட தனியார் ஓட்டுநரின் மண்டை உடைப்பு : ஆத்திரம் அடங்காததால் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திய இளைஞர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 5:47 pm

திண்டுக்கல் : நத்தம் அருகே ரேடியாவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் சண்டையிட்டு வீடு எரிப்பு இருவரை போலீசார் கைது செய்தனர்.

நத்தம் சாணார்பட்டி கொசவபட்டி வடக்கு தெரு பகுதியில் வசிப்பவர் பெனடிக் லூயிஸ் (வயது 60). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிபாரதி (வயது 21), ஜோசப் ஆரோக்கியம் (வயது 22), ஆகியோருடன் ரேடியோவில் சத்தமாக பாட்டு கேட்டதாக கூறி இரு தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று மீண்டும் மூவருக்கும் இடையே பிரச்சனை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் பெனடிக் லூயிஸ் மண்டைய உடைத்தும், அவரது வீட்டிற்கு தீயும் வைத்தனர். இதில் பல்லாயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

சம்பவம் குறித்து விசாரித்து சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் குற்றவாளிகள் கவிபாரதி, ஜோசப் ஆரோக்கியம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ