தொடரும் கனமழை எச்சரிக்கை… தூத்துக்குடியில் 3 வது நாளாக கரையில் படகுகளை நிறுத்தி வைத்த மீனவர்கள்…!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 8:51 am

கனமழை எச்சரிக்கை காரனமாக தூத்துக்குடி-யில் இன்று 3-வது நாளாக விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய்யம் அறிவிப்பு விடுத்திருந்தது. இதனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று சுமார் 260-விசைபடகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை மீன்பிடி துறைமுகத்தின் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

  • Choreographer opens up about Silk Smitha's marriage to celebrity's son பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!