அங்கன்வாடியில் பெய்த அடை மழை… கூரையில் ஓட்டை : ஒழுகும் நீரோடு உறங்கும் குழந்தைகள்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 1:24 pm

திருப்பூர் : அங்கன்வாடியில் மழை நீர் ஒழுகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராமியாம் பாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் மழைநீர் ஒழுகும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராமியாபாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கலந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மழை பெய்து வரும் பொழுது அங்கன்வாடியில் தூங்கும் குழந்தைகள் அருகே மழை ஒழுகும் காட்சியை குழந்தைகளின் பெற்றோர் ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ராமியாபாளையம் அங்கன்வாடி கட்டிடம் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதை இதுவரை புனரமைக்கவில்லை.

மேலும் 50 ஆண்டுகளாக அங்கன்வாடி மையத்தில் மின்சாரம் இன்றி உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் ஒழுகும் இடத்தை சரி செய்து தர வேண்டும் மேலும் அங்கன்வாடிக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!