உஷார் மக்களே.. சென்னையில் தொடரும் மழை.. வானிலை மையம் கடும் எச்சரிக்கை!

Author: Hariharasudhan
15 அக்டோபர் 2024, 10:47 காலை
chennai rains
Quick Share

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: இன்று முதல் வருகிற 18ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று காலை முதல் தற்போது வரை சென்னை உள்ளிட்ட தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை அண்ணா நகர் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். முக்கியமாக, கோயம்பேடு பேருந்து நிலையம் தண்ணீரால் மூழ்கி காணப்படுகிறது. இதனால் வெளியூரில் இருந்து வந்த மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: கோவையில் பரவும் ஃபுளூ வைரஸ்… அறிகுறியே இதுதான்? மக்களே உஷார் : மாவட்ட நிர்வாகம் அறிவுரை!!

இதனிடையே, மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேளச்சேரி – பள்ளிக்கரணை மேம்பாலத்தில் வேளச்சேரி பகுதி மக்கள் தங்களது கார்களை பார்க்கிங் செய்திருந்தனர்.

அந்த கார்கள், தற்போது நோக்கத்திற்கு ஏற்றார் போன்று கார்கள் மழையில் எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளது. ஆனால், நேற்று மாலை மேம்பாலத்தில் நிற்க வைக்கப்பட்டு இருந்த கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததாக தகவல் வெளியான நிலையில், அதற்கு சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதிப்புகளை ஒருங்கிணைத்து அங்கு பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இதனிடையே, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, நாளை தமிழ்நாடு, தெற்கு அந்தமான், கோவா வழியாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சென்னை காசிமேடு உள்ளிட்ட இடங்களில் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  • CM Stalin பங்கம் செய்யும் பாஜக…பாராட்டும் ஆளுநர்…தமிழக அரசியலில் என்ன நடக்குது?
  • Views: - 79

    0

    0

    மறுமொழி இடவும்