தொடர் கனமழை எதிரொலி… கோவை குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்… வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
5 July 2023, 10:40 am

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கின் காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் நேற்று முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கோவை குற்றாலத்தில் மழை பெய்து வந்த நிலையில், மதியத்திற்கு மேல் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவும், கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும், சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம் குட்டைகள் ஆகியவை வேகமாக நிரம்பின.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 461

    0

    0