சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை : ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள், வெற்றிலை கொடி பயிர்கள் சேதம்..விவசாயிகள் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 2:38 pm

பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையினால் பெரியகுளம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் மேலான வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த சூரை காற்றுடன் கன மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்ல கருப்பம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடவு செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் பாதி விளைச்சல் மற்றும் பிஞ்சு காய்களுடன் இருந்த வாழை மரங்கள் அனைத்தும் முறிந்து சேதம் அடைந்துள்ளது.

மேலும் நல்ல கருப்பம்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால் முற்றிலும் ஒடிந்து சேதம் அடைந்துள்ளது. நேற்று மாலை அடித்த சூறைக்காற்றால் 25 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு நிறைய வாழை மரங்கள்ங்கள் சேதம் அடைந்துள்ளது

மேலும் வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்துள்ளது குறித்து விவசாயி கூறுகையில் பிஞ்சு பருவத்தில் உள்ள வாழைகள் அனைத்தும் சூறாவளி காற்றில் ஒடிந்து சேதமடைந்துள்ளதால் வாழைக்காய்களை விற்பனை கூட செய்ய முடியாத நிலையில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்துள்ள நிலையில் தற்பொழுது வாழை மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் கூட்டுறவு கடன் களை எவ்வாறு கட்டுவது என்பது தெரியாமல் இருப்பதாகவும் இயற்கை சீற்றத்தினால் வாழை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி