மீண்டும் தாய் கழகத்துக்கே வந்த அமமுக பிரமுகர் : ஓபிஎஸ் இபிஎஸ் முன்னிலையில் இணைந்த ஹென்றி தாமஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 8:45 pm

சென்னை : தூத்துக்குடி அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடியின் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி தாமஸ். இவர் அமமுக கட்சியில் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அவர் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்படி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இவர் ஏற்கனவே அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர், தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.,யுமான கடம்பூர் ராஜு, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னாள் மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேசியும் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!