அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு : கர்ப்பிணிகளுக்காக புதிய நடைப்பாதை திறப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2022, 7:56 pm

கோவை : கோவையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.

கோவை இருகூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்த மருத்துவ பிரிவும் செயல்பட்டு வருகிறது. இருகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ பிரிவு மற்றும் ரோட்டரி கிளப் ஹெரிட்டேஜ் சார்பில் அங்கு மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. இதில், ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ராஜசேகர், துணை ஆளுநர் பாஸ்கர், தலைவர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மூலிகை தோட்டத்தையும் திறந்து வைத்தார்.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக புதிதாக அமைக்கப்பட்ட ‘8’ வடிவ நடைபாதையையும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த மூலிகை தோட்டத்தில் பிரண்டை, நிலாவரை, அறுகம்புல், அந்திமல்லி மற்றும் அரிவாள் மனைப்பூண்டு உள்ளிட்ட வகையான மூலிகைகள் இடம்பெற்றுள்ளன. சித்த மருத்துவம் தேடி வரும் நோயாளிகளுக்கு இந்த வகை மூலிகை செடிகள் உதவும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக், சித்த மருத்துவ அலுவலர்கள் நடராஜன், ரம்யா, சமீர். பீரதிபா மருத்துவர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!