வால்பாறை அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டம் : தேயிலை தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2022, 1:35 pm

வால்பாறை அருகே அக்கா மலையில் 20க்கும் மேற்பட்ட காட்டுயானை முகாமிட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம் என உள்ளது. அடர் வனப்பகுதி அருகில் தேயிலை தோட்டங்கள் உள்ளதால் வனப்பகுதியைவிட்டு வனவிலங்குகள் யானை, சிறுத்தை, மான், புலி, காட்டுமாடு உள்ளிட்டவை தேயிலை தோட்டம், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் தென்படுகிறது.

காட்டுயானைகள் அருகில் உள்ள கேரளா வன பகுதியைவிட்டு தமிழக வனபகுதி முடிஸ், சின்கோனா, நல்ல காத்து, நல்ல முடி, குரங்கு முடி, சோலையார் போன்ற பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது.

அக்காமலை எஸ்டேட் பகுதியில் பத்தாம் நம்பர் காட்டுப் பகுதியில் ஒரே நேரத்தில் ஆறு குட்டிகளுடன் 20 காட்டு யானைகள் தேயிலை காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளது.

எனவே அப்பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி