வசூல்ராஜா ஓபிஎஸ்.. கட்சியை காட்டிக் கொடுக்க தயங்கவே மாட்டார் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 6:10 pm

சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள். வீட்டுவசதி, கருவூலம், நிதி என அனைத்து துறைகளுமே கேட்டு வாங்கி கொண்டவர் தான் பன்னீர்செல்வம்.

உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., திரைப்படம் போல வசூல்ராஜா பன்னீர்செல்வம். சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். ஆனால், அந்த உத்தமனை நம்ப மக்கள் தயாராக இல்லை. வாயெல்லாம் பொய்.

பொய்யிலே பிறந்த புலவரை போல பொய்யிலே பிறந்தவர் பன்னீர்செல்வம். அவர் வசூல்ராஜா பன்னீர்செல்வம். அவர் கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் போல, மக்களை நம்ப வைக்கிறார். ஆனால், அதனை நம்ப மக்கள் தயாராக இல்லை.

அ.தி.மு.க., ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு வராத நிலையில், பன்னீர்செல்வம் வகித்த துறையில் மட்டும் ஊழல் புகார் வந்தது ஏன்? தொண்டர்கள், நிர்வாகிகள் செல்வாக்கு அவருக்கு கிடையாது.

ஊடகங்கள் மற்றும் தி.மு.க.,வை நம்பி அரசியல் செய்கிறார். துரோகம் செய்ததில் பன்னீர்செல்வம் கைதேர்ந்தவர். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்பவர். கட்சியை காட்டிக் கொடுக்க தயங்காதவர்.

அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டது. தற்போது தி.மு.க., ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?