எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. மாணவர்கள் போராட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2025, 10:57 am
தெலங்கானா மாசிலம் முன்னாள் அமைச்சர் தற்போதைய எம்.எல்.ஏ.மல்லாரெட்டிக்கு சொந்தமான மெட்சல் நகரில் உள்ள சி.எம்.ஆர் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியில் நேற்று பெண்கள் விடுதி குளியலறையில் முறைகேடாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
சி.எம்.ஆர். கல்லுாரி பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமிரா வைத்து மாணவிகளை வீடியோ எடுத்ததாக மாணவர்கள் கல்லூரி விடுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்த மேட்சல் போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி விடுதி ஊழியர்களிடம் இருந்த 12 போன்களை பறிமுதல் செய்தனர். அவர்களில் விடுதி சமையலறையில் பணிபுரிந்து வந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: SS ஹைதராபாத் பிரியாணியில் ஊர்ந்து சென்ற பூச்சி.. வாடிக்கையாளர் அதிர்ச்சி : ஷாக் வீடியோ!
இதில் குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 300 வீடியோக்களை பதிவு செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவை சமூக வலைதளங்களில் கசிந்தால் எம்எல்ஏ மல்லாரெட்டி தான் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மாணவர்களிடம் உறுதியளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இதற்கிடையில், எதிர்காலத்தில் இதுபோன்ற தனியுரிமை மீறல்களைத் தவிர்க்கும் வகையில் விடுதியில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாணவர்கள் கேட்டு கொண்டனர்.