கண்ணை மறைத்த உல்லாசம்.. நகை, பணத்துடன் மாயமான மனைவி : கோபத்தில் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 1:22 pm

கண்ணை மறைத்த உல்லாசம்.. நகை, பணத்துடன் மாயமான மனைவி : கோபத்தில் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்!!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் அவரது மனைவி விஜி என்வருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வெங்கடேசன் மனைவிக்கும் அதே பகுதியை சார்ந்த கன்னியப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசம் அனுபவிப்பது வெங்கடேசனுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் வெங்கடேசன் மனைவி அவரது பேச்சை கேட்காமல் கன்னியப்பனுடன் சேர்ந்து தான் வாழுவேன் என கூறியுள்ளார். இதனால் சண்டை ஏற்படவே இரண்டு தினங்களுக்கு முன் வெங்கடேசனின் மனைவி விஜி 20 சவரன் தங்க நகை மற்றும் 15 லட்சம் பணத்தை எடுத்து சென்றுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த கணவர் வெங்கடேசனை பழி வாங்க கோலியனூர் பகுதி முழுவதும் முக்கிய அறிவிப்பாக விஜி என்பவர் வெங்கடேசனை கல்யாணம் செய்து 25 வருடம் ஆகிய நிலையில் அனு அம்மு என்ற இரண்டு பெண் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் தன்னிடமிருந்து 20 சவரன் நகை 15 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவிலுள்ள கன்னியப்பன் என்பவருடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதாக போஸ்டர் அடித்து ஒட்டி பழிவாங்கியுள்ளார்.

மேலும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டரால் கோலியனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!