“அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்குமா?”- உயர் நீதிமன்றம் கேள்வி!

Author:
21 June 2024, 5:03 pm
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருநாபுரத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிமன்றம் இது குறித்த வழக்கினை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது, கள்ளக்குறிச்சியில் நடந்தேறிய சம்பவத்தில் 118 பேர் பாதிக்கப்பட்டு 52 பேர் இறந்துள்ளனர். மீதம் இருப்பவர்கள் சிலர் உடல் நிலை தேரியும் சிலர் கவலைக்கிடமாகவும் உள்ளனர். கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் இது போன்ற சம்பவம் நடந்தது.இருப்பினும் ஓர் ஆண்டு ஆகிவிட்டது அந்த வழக்கு விசாரணையை தீவிரபடுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்திருக்குமா? இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கள்ளச்சாராயம் குறித்த புகார்கள் வந்ததில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது? என்று நீதிபதிகள் தமிழக அரசை கன்னத்தில் அறைந்தது போன்ற கேள்விகளை அடுத்தடுத்து எழுப்பினர். தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞரான ராமன் பதில் அளித்த போது ஏற்கனவே நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அதன் விளக்கங்களையும் பதிவு செய்தார்.
இருப்பினும் ஆத்திரமடைந்த நீதிபதிகள் தமிழகத்தில் எத்தனை முறை இது போன்ற சமூகங்கள் நடந்தாலும் அரசு ஒருமுறை கூட பாடம் கற்கவில்லையா? மீண்டும் மீண்டும் இதுபோல் சம்பவங்கள் நிகழலாமா? என்று கேள்வி எழுப்பியது. மேலும் கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷசாராய பலிகள் தொடர்பான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

Views: - 97

0

0

Leave a Reply