ரூ.20 இருந்தால் அம்மா உணவகத்தில் ஒருவரின் ஒருநாள் பசியை ஆற்றி விடலாம்… வனத்துறை தொடர்பான வழக்கில் சுட்டிக்காட்டிய நீதிமன்றம்..!!
Author: Babu Lakshmanan29 September 2022, 6:32 pm
ரூ.20 இருந்தால் ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வனத்துறையிடம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே என்றும், ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்திவிடலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வனப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளையும், கடைமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், வனத்துறை போலீசார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.