ஹிஜாப் சேலஞ்ச்.. கோவையில் சர்ச்சை நிகழ்ச்சி நடத்திய யூடியூபர் : தட்டித் தூக்கிய போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 10:40 am

கோவையின் பிரபல ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட சில பெண்களிடம் பர்தா அணிந்த பெண் ஒருவர் சென்று ஹிஜாப் சேலஞ்ச் என்ற நிகழ்ச்சிக்காக வீடியோ எடுப்பதாக கூறி ஹிஜாப் அணிவித்து வீடியோ எடுத்தார்.

பின்னர் அல் கஸ்வா டிவி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இது பிற மதப்பெண்களிடம் தங்கள் மத அடையாளங்களை திணிப்பதாகவும், இது போன்று பொடு வைக்கும்படி கூறி நாங்கள் வீடியோ எடுத்தால் ஏற்றுக் கொள்வார்களா என்று இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.

இதற்கிடையே பாரதிசேனா அமைப்பாளர் குமரேசன் என்பவர் கோவை சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அல் கஸ்வா டிவி யூடியூப் சேனல் உரிமையாளர் நீலகிரி மாவட்டம் இன் அரை சேர்ந்த அனஸ் அகமது (21) என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

  • Tamannaah marriage rumors கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
  • Views: - 278

    0

    0