மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் இந்தி Vs மாநில மொழிகள்.. ட்விட்டரில் வார்த்தை போர் நடத்தும் பிரபலங்கள்..!

Author: Rajesh
27 April 2022, 6:25 pm

கன்னட சினிமாவை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது கேஜிஎப் 2 படம். தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியில் வசூல் சாதனை படைத்து வருகிறது .

கேஜிஎப் பிரம்மாண்ட வசூல் பெறுவது பற்றி ஒரு விழாவில் பேசிய கன்னட நடிகர் சுதீப் ‘கன்னடத்தில் ஒரு Pan Indian படம் எடுத்திருப்பதாக சொல்கிறீர்கள். அதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய விரும்புகிறேன். ஹிந்தி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டிலும் Pan Indian படம் எடுக்கிறார்கள். அதை தெலுங்கு, தமிழில் டப் செய்து வெளியிட்டாலும் வெற்றி பெறுவதில்லை. இன்று நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் படம் எடுத்திருக்கிறோம்’ என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், சுதீப் கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதில் கொடுத்து இருக்கிறார். ‘உங்களை பொறுத்தவரை ஹிந்தி தேசிய மொழி இல்லை, அப்போது ஏன் உங்கள் தாய்மொழி படத்தை இந்தியில் டப் செய்கிறீர்கள். இந்தி எப்போதும் எங்களுக்கு தாய்மொழி மற்றும் தேசிய மொழி தான்’ என கூறி இருக்கிறார்.

அஜய் தேவ்கன் போட்டிருக்கும் ட்விட் தற்போது ‘இந்தி மாநில மொழிகள்’ பிரச்சனையில் எண்ணையை ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைத்திருக்கிறது. ட்விட்டரில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 1301

    0

    0