முதல்ல இந்தி கத்துக்கணும்… அப்பதான் தமிழை வளர்க்க முடியும் : முதலமைச்சர் ஸ்டாலினை சாடிய ஆளுநர் தமிழிசை!!
Author: Udayachandran RadhaKrishnan22 December 2023, 2:31 pm
முதல்ல இந்தி கத்துக்கணும்… அப்பதான் தமிழை வளர்க்க முடியும் : முதலமைச்சர் ஸ்டாலினை சாடிய ஆளுநர் தமிழிசை!!
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் தமிழிசை அங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தி உள்ளிட்ட எந்தவொரு மொழியையும் புதிதாக கற்றுக் கொள்வதில் தவறில்லை. இது நமக்கு உதவியாகவே இருக்கும். நாம் வட இந்தியாவில் தமிழை வளர்க்க வேண்டுமானால் நாம் முதலில் இந்தி கற்க வேண்டும்.
கம்பர் எப்படி வால்மீகியின் ‘ராமாயணத்தை’ படித்து, ‘கம்பராமாயணம்’ தமிழில் எழுதினாரோ.. அதேபோல நாம் பிற மொழிகளைக் கற்றுத் தமிழை வளர்க்க வேண்டும். திமுக அரசியல் நோக்கத்திற்காக மொழியைப் பயன்படுத்தியது, இப்போது இந்தியை நிராகரிப்பதால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற பாடத்தை கற்றுள்ளனர்.
இந்தி கற்க வேண்டும் என நிதிஷ் குமாரின் ஏன் அட்வைஸ் செய்தார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போதாவது உணர்வார் என்று நம்புகிறேன். இந்தி கற்றுக்கொள்வது சிறப்பான ஒன்று. அதை ஸ்டாலின் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். ஏனென்றால் இப்போது அவரது கூட்டணி தலைவரே இதைச் சுட்டுக்காட்டியுள்ளார்.
ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி. அந்த அந்நிய மொழியை கற்பதற்குப் பதிலாக நாம் நமது நாட்டில் இருக்கும் ஒரு மொழியையே கற்றுக் கொள்ளலாமா.. இந்தி கற்காமல் இருந்ததால் தான் நம்மால் வலுவான ஒரு தலைவரை தேசியளவில் அனுப்ப முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.