சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி மோதலை ஏற்படுத்த சதி? இந்து முன்னணி பிரமுகர் அதிரடி கைது!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2025, 11:18 am

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளராக உள்ளவர் ஜெகன்.

இதையும் படியுங்க: ஆக்ரோஷமாக துரத்திய யானை… அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோகம்!

சென்னையில் உள்ள இஸ்லாமியர்க்கு சொந்தமான உணவகத்தில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர் என்பதால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் சாதகமாக செயல்படுவதாக அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோயை ஜெகன் பதிவிட்டார்.

இந்தநிலையில் சர்ச்சையை ஏற்படுத்தி இரு மதங்களுக்கு இடையே பிரச்சனையை உண்டு பண்ணும் வகையில் வீடியோ உள்ளதாக புகார் எழுந்தது.

Hindu Munnani Executive Arrest

இதன் மத மோதலை உருவாக்குதல், பொது அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பழனி கிளை சிறையில் அடைத்தனர்.

  • sekar babu is the original karathey babu நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே
  • Leave a Reply