கோவையில் மிகப்பெரிய கலவரத்தை உருவாக்க சதித்திட்டம்… காடேஸ்வரா சுப்பிரமணியம் பகீர்!

Author: Babu Lakshmanan
24 September 2022, 7:24 pm

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை காட்டூர் பகுதியில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :- கோவையில் மிகப்பெரிய கலவரத்துக்கு திட்டமிட்டுள்ளனர். பல கோடி ரூபாய் பணம் அவர்களுக்கு போயுள்ளதால் என்ஐஏ சோதனை நடந்துள்ளது.

பயங்கரவாத செயல்கள் அவர்கள் செய்தது நிரூபிக்கப்பட்டதன் காரணமாக தான் என்ஐஏ சோதனை செய்துள்ளது. அதற்கான ஆதாரங்களையும் எடுத்துள்ளனர். மேலும், தமிழகத்தில் திமுக மூன்று குழுவாக பிரிந்துள்ளது என தெரிவித்த அவர், முதல்வர் கேள்வி கேட்டால் ஆ.ராசாவால் கட்சி பிளவுபடும் என்பதால் மவுனமாக உள்ளார் என குற்றம்சாட்டினார்.

மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும், தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 618

    0

    0