இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு… திமுக எம்பி ஆ.ராசாவுக்கு இந்து முன்னணி கண்டனம்… தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
Author: Babu Lakshmanan17 September 2022, 4:09 pm
இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய திமுக எம்பி ஆ.ராசாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரியார் திடலில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க., எம்.பி. ஆ.ராசா, இந்துக்கள் குறித்து விமர்சனம் செய்துள்ளதாக தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் புகார் மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து முன்னனி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்து முன்னனி மாநில பொறுப்பு குழு உறுப்பினர் சதீஷ் தலைமையில் மனு வழங்கப்பட்டது.
தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆ.ராசா இந்து மதத்தை வேண்டும் என்று விமர்சிப்பதாகவும், கேவலப்படுத்துவதாகவும், மாற்று மதத்தினரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக நெருப்பு பேச்சாக ஆராசா வெளிப்படுத்தி உள்ளார்.
இந்து முன்னணி கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று இதற்கு பிரிவினை வாதத்தை முறியடிப்போம், ய சிந்தனை வளர்ப்போம் என்று கூறியுள்ளதாகவும், ஜகத் கஸ்பர் ஆரம்பித்து பிரிவினை வாதத்தை தூண்டுவதாகவும், அதற்கு தி.மு.க அரசு உறுதுணையாக இருப்பதாகவும் கூறினார்.
ஆர்எஸ் பாரதி பேசியபோது 2ஜி வழக்கையே பார்த்தவர். இந்த வழக்கை பார்க்க மாட்டாரா என்று முட்டு கொடுப்பதாக உள்ளதாகவும், இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். இது சம்பந்தமாக தமிழகம் முழுவதும் மாநகர ஆணையரிடமும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், நாளை கோவை மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் போராட்டம் அறிவித்து உள்ளதாகவும், தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் அவருடன் மாவட்ட தலைவர் K.தசரதன் கோவை கோட்டுச் செயலாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.