பைக் திருட்டில் சிக்கிய இந்து முன்னணி துணைத் தலைவர் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!!
Author: Udayachandran RadhaKrishnan18 May 2023, 11:20 am
கோவை ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட நடத்தப்பட்ட விசாரணையில் பாலகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரிடமும் இருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலகிருஷ்ணன் என்பவர் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவராக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் ராமநாதபுரம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.