இந்து தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் ; கார், பைக்குகளும் சேதம் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

Author: Babu Lakshmanan
21 August 2023, 8:10 pm

கன்னியாகுமரி அருகே இந்து தமிழர் கட்சி மாநில நிர்வாகியின் கார் மற்றும் வீட்டை கருங்கற்களால் உடைத்து சேதப்படுத்தும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஈசான சிவம். இந்து தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார். நேற்று நள்ளிரவு அவரது வீட்டிற்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த ஸ்கார்ப்பியோ காரை கருங்கற்களால் அடித்து நொறுக்கியதோடு, வீட்டின் கதவு மற்றும் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி அங்கிருந்து தப்பியோடியது.

இதுகுறித்து ஈசான சிவன் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் அந்த கார் மற்றும் வீட்டை கற்காளால் எறிந்து அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://player.vimeo.com/video/856434702?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…