வாக்காளர்களுக்கு ‘துட்டு’ கொடுக்க பணம் பதுக்கலா? கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஐடி ரெய்டு!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 1:25 pm

வாக்காளர்களுக்கு ‘துட்டு’ கொடுக்க பணம் பதுக்கலா? கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஐடி ரெய்டு!

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நாமக்கல் பகுதியில் தனியார் கல்வி நிறுவனர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது ₹5 கோடி பணம் சிக்கியது.

இதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேர்தலுக்கு பணம் கொடுக்க பதுக்கப்பட்டுள்ளதாக என தேர்தல் பறக்கும் படை விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவையில் சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதியில் டாக்டர் முத்தூஸ் என்ற பெயரில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி சரவணம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளில் 5 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் சோதனையிட்டனர்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறியதாவது, நேற்று பிற்பகல் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு வந்ததாகவும், அக்கவுண்ட்ஸ் துறையில் சோதனை நடத்திய அவர்கள் ஒரு மணி நேரத்தில் புறப்பட்டு சென்றதாக கூறினர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?