காவலர் குடியிருப்பில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கிரைண்டர்கள் பதுக்கல் : இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 8:54 pm

காவலர் குடியிருப்பில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கிரைண்டர்கள் பதுக்கல் : இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!!

2014 – 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் விலையில்லா பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் உள்ள குடியிருப்பு ஒன்றில், மூன்று அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு மூன்று கிரைண்டர்களை உடைத்து அதிலுள்ள இரும்புகளை பிய்த்தெடுத்து காயாலன் கடைக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இங்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளவர்கள் அரசு அதிகாரிகளா அல்லது சமூக விரோதிகளா என சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!