8 மணி நேரம் ஜல்லிக்கட்டை நடத்துங்க.. ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யுங்க : ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 7:39 pm

8 மணி நேரம் ஜல்லிக்கட்டை நடத்துங்க.. ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யுங்க : ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் வலியுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களின் நடைபெறுவது போல் மாலை 4 மணி வரை நடத்த வேண்டும்.

அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 750 காளைகள் வரை அவிழ்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கும் காளை வளர்ப்போருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் நுழைவுச்சீட்டினை ஆன்லைன் மூலம் வழங்கும் முறையை மாற்றி, கால்நடை பராமரிப்பு துறை ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு நடத்தும் ஊர் விழா கமிட்டி சார்பில் அனுமதி சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி இன்று 03.01.24 திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பில்லம நாயக்கன்பட்டி, கொசவபட்டி, மறவப்பட்டி, உலகம்பட்டி உட்பட பல ஊர்களில் இருந்து மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்பவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் வருகை தந்து தாங்கள் கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடியிடம் வழங்கினர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 566

    0

    0