கோவையில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம் : வண்ணங்களை பூசி வட இந்தியர்கள் உற்சாகம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 March 2023, 8:35 pm
கோவையில் வண்ணப் பொடிகளை பூசி வட இந்தியர்கள் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒன்றாகும். இந்த பண்டிகையின் போது வண்ண வண்ண பொடிகளை ஒருவருக்கொருவர் ஊசி கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இந்த ஹோலி பண்டிகை கோவையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக கூடி ஒருவர் ஒருவர் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு விஷ்ணு கடவுளை வழிபட்டு பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர்.
அதன்படி கோவையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று ஹோலிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பணிகளை பூசிக்கொண்டு ஹோலியை கொண்டாடினர்.