ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… எந்த தேதி தெரியுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 7:05 pm

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… எந்த தேதி தெரியுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் 18ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி என்றும் செப்டம்பர் 19 இல் வடமாநிலத்தவர்கள் கொண்டாடுவர் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை அறிவிப்பை ரத்து செய்துவிட்டு 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கான விடுமுறையை அறிவிக்க வேண்டும் என இந்து அமைப்புகளை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதியில் மாற்றத்தை தமிழக அரசு கடந்த 31 ஆம் தேதி அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கெனவே செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை என்ற அரசாணையை நீக்கிவிட்டு செப்டம்பர் 18 ஆம் தேதி விடுமுறை என்ற புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (பொதுவாக ஞாயிறுகளில் கடை உண்டு) விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தி 18 ஆம் தேதிதான் என உறுதி செய்யப்பட்டுவிட்டதால் ரேஷன் கடைகளுக்கான விடுமுறை நாளை 17 ஆம் தேதியிலிருந்து 18 க்கு மாற்றியுள்ளது தமிழக அரசு.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!