வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவன் பலி ; தந்தை இறந்த 10 நாட்களில் நிகழ்ந்த சோகம்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 7:49 pm

திருப்பூரில் மாநகராட்சி சார்பில், சாக்கடை கட்ட தோண்டப்பட்ட குழியின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட அருள்ஜோதிபுரம் பகுதியில் சாக்கடை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் சாக்கடை கட்டுவதற்காக குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. சாக்கடை கட்ட தோண்டப்பட்ட குழியின் காரணமாக அப்பகுதியில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள் பலம் இழந்து காணப்பட்டது.

இந்நிலையில் சாலைக்கும், வீட்டிற்கும் நடுவே சாக்கடை கட்ட தோண்டிய குழியின் இடைவெளியை கடக்க அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அபிராம் மரப்பலகையை போட முற்படும் போது, பலமிழந்திருந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான்.

இதனையடுத்து அருகிலிருந்தவரக்ள் உடனடியாக சுவர் இடிபாடுகளை அப்புறப்படுத்தி மாணவனின் உடலை மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மாணவனின் தந்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 610

    0

    0