அம்மா கூட பழகி வரும் அங்கிள் என் தம்பியை அடிச்சு சாகடிச்சிட்டாரு.. சாட்சியாக வந்த 9 வயது சிறுமி!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2024, 1:29 pm

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொலை செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேரு நகரில் வசிப்பவர் ஆனந்தன் தனம் தம்பதிகள். இவர்களுக்கு எட்டு வயதில் ஷோபனா என்ற மகளும் ஆறு வயதில் குகன் என்ற மகனும் உள்ளனர். குகன் ஒன்றாம் வகுப்பு சோபனா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளாக ஆனந்தனுக்கும் மனைவி தனத்துக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. தனம் தன்னுடைய பிள்ளைகளுடன் நேரு நகரில் வசித்துக்கொண்டு பரந்தூர் நிலை எடுப்பு அலுவலகத்தில் மசால்சி வேலை செய்து வருகிறார்.

அதே அலுவலகத்தில் ராஜேஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். ராஜேஷ் செவிலிமேடு அருகே வசித்து வருகிறார். தனத்துக்கும் ராஜேஷுக்கும் திருமணத்துக்கு மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பெயரில் ராஜேஷ் அவ்வப்போது தனத்தின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனத்திடம் கூறிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் ராஜேஷ் அழைத்துக் கொண்டு செல்லும்போது தனத்தின் அம்மா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகாதே எனத் தடுத்துள்ளார்.

அதற்கு தனம் பிள்ளைகளை அழைத்துப் போகட்டும் என ராஜேஷுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அதன் பெயரில் ராஜேஷ் தனத்தின் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு செவிலி மேட்டில் உள்ள வீட்டுக்கு சென்று உள்ளார்.

இதையும் படியுங்க: ஏழுமலையான் கோவிலில் பவன் கல்யான்… தனது மகள்களுடன் சிறப்பு வழிபாடு..!!

விடியற்காலையில் தனத்துக்கு போன் செய்து குகனுக்கு உடல் நலம் சரியில்லை , மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றேன் என கூறிவிட்டு குகனை வாகனத்தில் வைத்துக் கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கே மருத்துவர்கள் குகனை பரிசோதித்து விட்டு ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்கள். மேலும் குழந்தையின் உடம்பில் ஆங்காங்கே ரத்த காயம் இருந்துள்ளதால் காவல்துறையினருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து குகனின் சடலத்தை கைப்பற்றிய தாலுக்கா காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சங்கராமன் , பிரேத பரிசோதனைக்காக குகனின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜேஷ்சை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

நேற்று மாலை குகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனத்தின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அருகே உள்ள தாயார் அம்மன் குளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

இது தொடர்பாக குகனின் அக்கா ஷோபனா காவல்துறையினரிடம் கூறியது, என்னுடைய தம்பியை ராஜேஷ் அங்கிள் அடித்தார். மிதித்தார். தள்ளிவிட்டார்.

அதனால் என் தம்பி இறந்து விட்டான் என காவல்துறையிடம் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ராஜேஷின் வீட்டில் இருந்த குகனின் ரத்தக்கரை படிந்த துணிமணிகளை காவல்துறையினர் கைப்பற்றி , குகனின் சாவில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதைப் பற்றி காவல்துறையிடம் கேட்டபோது, முழுமையான விசாரணைக்குப் பிறகு எப்ஐஆர் 302 செக்க்ஷனில் மாற்ற வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

அரசு அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்குள்ளே கள்ளக்காதல் மலர்ந்து , தொடர்ந்து, அதன் மூலம் ஆறு வயது சிறுவன் அநியாயமாக அடித்து கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 295

    0

    0