கொரோனா காலத்தில் அவசர தேவைகளுக்கு பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கவுரவம் : CM ஸ்டாலின் போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2023, 8:57 pm

கொரோனா காலத்தில் அவசர தேவைகளுக்காக பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களை கவுரவிக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடியும், ஊதிய நிலுவைத் தொகை ரூ . 171.05 கோடி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.

ரூ.1.70 கோடி, கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழுஅடைப்பின் போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியான பேருந்து சேவைகளுக்காக, பேருந்துகளை இயக்கின.

அப்போது, போக்குவரத்துப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலத்திற்கு பின், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 14 வது ஊதிய ஒப்பந்தத்தை 01-09-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 2022 முதல் 0960602022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!