விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து – மாரியம்மாள் என்பவரின் மகனான அழகேந்திரன் (21) இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார்.
இதனிடையே அழகேந்திரன் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை (பள்ளர்) சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அழகேந்திரன் தனது உறவினரான மதுரை கள்ளிக்குடியில் உள்ள அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார் .
அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தனது மகனை காணவில்லை என அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென கூறி காவல்துறையினர் கூறிய நிலையில் கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார்.
இதனிடையே இன்று காலை அழகேந்திரன் கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்துசென்ற பிரபாகரனை காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனிடையே அழகேந்திரனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது
இந்நிலையில் தனது மகன் காதலிப்பதாக கூறிய பெண்ணின் உறவினர்கள் தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாக கூறியும் அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.