பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படம்… தாய் என நினைத்து பேருந்து பின்பு ஓடிய தனித்துவிடப்பட்ட குதிரை குட்டி… நெகிழுச் செய்யும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 8:41 pm

கோவை ; பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படத்தை பார்த்து, தாயை பிரிந்து வாடும் குதிரை குட்டி ஒன்று பேருந்தின் பின்புறம் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. அங்குள்ள தோட்டத்தில் உள்ள புற்களை உணவாக சாப்பிட்டு, பின்னர் அப்பகுதியில் சுற்றி வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று, வேறு பகுதிக்கு சென்றதால் அதனை பிரிந்து குட்டிக் குதிரை தாய்க்குதிரையை தேடி வந்தது.

இந்நிலையில், இன்று பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த குட்டி குதிரை பேருந்தை செல்ல விடாமல் பேருந்தையே சுற்றி வந்தது.

சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பும்போது, தாய்குதிரை இருப்பது போன்ற பொம்மையை பார்த்து பேருந்தை விடாமல் துரத்தி சென்று கத்தியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குட்டி குதிரையின் பாசத்தை பார்த்து சோகம் அடைந்தனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?