கிருஷ்ணகிரி அருகே மாணவ, மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இரு பாலர் மாணவ மாணவியர்கள் படிக்கும் இந்த அரசு பள்ளியில் 1000க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் ஓசூர் குறிஞ்சி நகர் பேஸ் 16 பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜுலு (45) என்பவர் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
கணித ஆசிரியர் கோவிந்தராஜுலு கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் 6ம் வகுப்பு மாணவி ஒருவரை மைதானத்தில் விளையாடும்போது, பின்புறமாக கட்டிப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் ரகுராமனிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய கணித பாட ஆசிரியர் கோவிந்தராஜுலுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
This website uses cookies.