சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? ஓட்டலில் ஏற்பட்ட திடீர் மோதல்.. ஆக்ரோஷமாக தாக்கிய சிவில் என்ஜினியர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 6:56 pm

கோவை ; ஓட்டலில் சாப்பாடு கேட்டு நடந்த தகராறில் இருதரப்பினர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்று உள்ளார். மூவரும் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் சைவ சாப்பாடு ஆர்டர் செய்த நிலையில், மற்ற இருவரும் ஒரு பிரியாணி வகையை வாங்கி இரண்டு பேர் பங்கிட்டு சாப்பிட்டு உள்ளனர்.

பிரியாணி சாப்பிட்டு பின் அவர்கள் தங்களுக்கு ஒயிட் ரைஸ் கொடுக்கும்படி கேட்டு உள்ளனர். பிரியாணி சாப்பிட்ட பின் ஒயிட் ரைஸ் கேட்டதால், அதற்கு ஒயிட் ரைஸ் கிடையாது எனக் கூறி அதனை கொடுக்க ஹோட்டல் ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால், சிவில் இன்ஜினியருக்கும், ஹோட்டல் பணியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்தது.

இதில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சிவில் இன்ஜினியர் உடன் வந்த மூன்று பேரும் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் வைரலானது. இரு தரப்பினரும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தனர்.

இதனிடையே, தாங்கள் சமாதானமாக செல்வதாக கூறி இரு தரப்பினரும் புகாரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வாபஸ் பெற்றனர். இதனிடையே, ஹோட்டல் ஊழியரை தாக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 443

    0

    0