கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வீடுகள்.. அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு : கண்ணீர் விட்டு கதறிய பள்ளி, கல்லூரி மாணவிகள்.. நியாயம் கேட்டு சாலை மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 3:59 pm

திருவள்ளூர் : பொன்னேரி அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் எனக்கூறி 46 குடும்பங்களைச் சார்ந்த 136 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சயனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 28. ஏக்கர் 78 சென்ட் நிலம் உள்ளது. இதில்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு முன்னிலையில் கடந்த 23ஆம் தேதி நிலங்களை மீட்டனர்.

அங்கு கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்த நிலையில் இன்று 46 குடும்பங்களைச் சேர்ந்த 110 வீடுகளுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொன்னேரி தச்சூர் சாலையில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வீசி எரிந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் காவல்துறையினர் சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 655

    0

    0