அவன் எப்படி சொகுசா வாழலாம்? பிரிந்து சென்ற கணவனை பழி வாங்க மனைவி போட்ட ஸ்கெட்ச்!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2024, 11:37 am

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் எழில்மாறன். சித்தரேவு ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார்

இந்நிலையில் எழில் மாறன் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதனை அடுத்து எழில் மாறன் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பைக் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில்
எழில் மாறனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆள் வைத்து கணவனின் பைக்கை திருட வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தன்னைப் பிரிந்து சென்ற கணவன் விலை உயர்ந்த புது பைக்கை வாங்கிக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்துக் கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி தனது உறவினர்கள் உதவியுடன் கணவனின் மோட்டார் சைக்கிளை திருடுவதற்கு திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதனை அடுத்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எழில் மாறனின் மோட்டார் பைக்கை கைப்பற்றிய போலீசார் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பால யோகி, பிரகாஷ், காயத்ரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர் தலைமறைவான எழில் மாறனின் மனைவி ஜெயலட்சுமியை தேடி வருகின்றனர்.

கணவனின் மோட்டார் சைக்கிளை மனைவியே திருடுவதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 255

    0

    0