ரயிலில் டிக்கெட் கூட வாங்க முடியாத கருணாநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து? ஹெச் ராஜா கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2023, 4:26 pm

குஜராத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகளை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இனிப்புகள் வழங்கி வழி அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலை திமுக நிர்வாகிகள் 17 பேருடையே சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட 17 பேரும் அண்ணாமலை வெளியிட்ட சொத்துக்கள் எங்களுடையது இல்லையென தெரிவிக்க வேண்டியது தானே அந்த சொத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென கூற வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியலில் தனியார் கம்பெனிகள்,கல்லூரி நிறுவனங்கள் என எதுவும் எங்களுடையது அல்ல என திமுகவினர் வாய் திறந்து சொல்லி இருக்கிறார்களா? என குறிப்பிட்டவர், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்தவர் கலைஞர் கருணாநிதி, சினிமாவில் கதை எழுதியதால் மட்டுமே அவருக்கு பணம் கிடைத்தது.

அப்படி இருக்கையில் அவரது குடும்பத்தினருக்கு இத்தனை லட்சம் கோடி சொத்து வந்தது எப்படி என கேள்வி எழுப்பினார். அண்ணாமலை வெளியிட்ட அந்த சொத்துக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லையென்றால் நீதிமன்றத்திற்கு திமுக நிர்வாகிகள் செல்ல வேண்டியது தானே என கூறினார்.

மேலும் அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யட்டும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 10 நாட்களுக்கு பிறகு அண்ணாமலையிடம் கேட்கலாம் என கூறினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!