எங்க சாதி பொண்ணுகிட்ட நீ எப்படி பேசலாம்.. 11ம் வகுப்பு பட்டியலின மாணவர் மீது தாக்குதல் : உயிரை மாய்த்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 3:51 pm

எங்க சாதி பொண்ணுகிட்ட நீ எப்படி பேசலாம்.. 11ம் வகுப்பு பட்டியலின மாணவர் மீது தாக்குதல் : உயிரை மாய்த்த விபரீதம்!!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கொப்பம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வீரமுத்து உமா தம்பதியினர் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்

இந்த நிலையில் இவரது மூத்த மகன் விஷ்ணுகுமார் 11ஆம் வகுப்பு கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்

இப்பள்ளியில் சக மாணவ மாணவிகளோடு படிப்பு ரீதியாக பழகி வந்த விஷ்ணுகுமார், இவர் மாற்று சமூக மாணவர்களிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீரனூர் பேருந்து நிலையத்தின் பகுதியில் வைத்து மாற்று சமூக நபர்கள் விஷ்ணு குமாரை தாக்கியுள்ளனர்

இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத விஷ்ணுகுமார் மீண்டும் பள்ளிக்கு பயில சென்றுள்ளார், அப்பொழுது மீண்டும் அரசு பள்ளியில் வளாகத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது

இதை வீட்டில் யாருக்கும் கூறாமல் இருந்து வந்தார் மாணவர் விஷ்ணுகுமார். இந்த நிலையில் நேற்று காலை கொப்பம்பட்டி கிராமத்தில் இருந்து பள்ளிக்கு பயில சென்றுள்ளார் விஷ்ணுகுமார்.

இவர் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கிளை நூலகம் பகுதியில் வைத்து தாக்கப்பட்டது தெரியவந்தது

இரு சமூக மாணவர்களிடையே நடந்த பிரச்சினை என்பது மாற்று சமூக மாணவன் விஷ்ணுகுமார் மாற்று சமூக பெண்ணிடம் படிப்பு ரீதியாக பழகி வந்துள்ளார்

இதை தவறாக புரிந்து கொண்டு கண்டித்து மாற்று சமூக மாணவர்கள் இவரை பலமுறை எச்சரிக்கை விடுத்து பல்வேறு இடங்களில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது

மாணவனை தாக்கும் பொழுது கீரனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு சமூக மாணவர்கள் இடையே பிரச்சனை ஏற்படாமல் அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர்

இந்த நிலையில் மணமடைந்த மாணவன் விஷ்ணுகுமார் மதியம் 12 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

மேலும் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை காவல்துறையினர் நேரடியாக ஊர் பொதுமக்களிடையே தெரிவித்துள்ளனர்

மேலும் மாணவன் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமெனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக ஜாதி பிரச்சனைகள் இருந்து வருவதாகவும் இதை கண்காணிப்பதற்காக உளவுத்துறை அமைக்க தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்

மேலும் அரசு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொள்ள தூண்டிய மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இறந்த குடும்பத்திற்கு அரசு ஊழிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் ஜாதி பிரச்சனை தொடராமல் இருக்க கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் தொடரும் ஜாதி பிரச்சனைகளால் மாணவன் தற்கொலை குறித்து உடையாளிப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 380

    0

    0