சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து சென்ற போது விபத்து நடந்தது எப்படி? வெளியான ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2024, 8:29 am

சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து சென்ற போது விபத்து நடந்தது எப்படி? வெளியான ஷாக் சிசிடிவி காட்சி!

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசிற்கு எதிராக பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அதில் மக்களிடையே பிரபலமான அவர், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்ததுடன் அண்மையில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார்.

இதற்கிடையே அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் காவல்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளையும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சவுக்கு சங்கர் பேசி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டார்.

காவல் துறை உயர் அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து வந்தனர். அப்போது காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியது. லேசான காயங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் சவுக்கு சங்கர். வரும் 17ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ளார் சவுக்கு சங்கர்.

முன்னதாக விபத்து நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கார் ஒன்று சாலையை கடக்க காத்திருந்த போது, எதிர்பாராத விதமாக சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?