விஜயகாந்த் எப்படி உள்ளார்? ரசிகர்கள், தொண்டர்களுக்கு SURPRISE : வெளியான பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2023, 2:30 pm

விஜயகாந்த் எப்படி உள்ளார்? ரசிகர்கள், தொண்டர்களுக்கு SURPRISE : வெளியான பரபரப்பு தகவல்!!

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்தின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார் விஜயகாந்த்.

பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களையும் ரசிகர்களையும் சந்திப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரால் பழையப்படி பேசவோ, நடக்கவோ முடியவில்லை. அவருடைய வேலையை கூட அவரால் செய்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நாளை அவருடைய பிறந்தநாள் என்பதால் அவரை காண அக்கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

சமீபத்தில செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அப்பாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

அப்பா பழைய மாதிரி பேச வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விஜய பிரபாகரன் தெரிவித்தார். விஜய பிரபாகரனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை கிளப்பியது.

விஜயகாந்தின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அப்பா நலமோடுதான் உள்ளார் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் விஜய பிரபாகரன்.

இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள விஜயகாந்த், தன்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தான் நலமுடன் இருப்பதாகவும் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் தனது பிறந்தநாளான நாளை காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகாந்தின் இந்த அறிக்கையால் தேமுதிக தொண்டர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளை விஜயகாந்தை காண இப்போதே தயாராகி வருகின்றனர் தொண்டர்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 415

    1

    0