தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தனை? புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான லிஸ்ட் நாளை ரிலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan29 March 2024, 11:46 am
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தனை? புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான லிஸ்ட் நாளை ரிலீஸ்!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இருக்கும் நிலையில், நாம் தமிழர் தன்னிச்சையாக களம் இறங்கியுள்ளது.
இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதன்பின் நேற்று வேட்புமனு மீதான பரிசீலினையும் காலை 11 மணி முதல் நடைபெற்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது.
இதில் தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட 1,502 வேட்புமனுக்களில் 933 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 569 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. நாளை வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
நேற்று வேட்புமனு மீதான பரிசீலினையில் அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இதனால், மாற்று வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளை 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.