இன்னும் எத்தனை நாள்தான் அமைச்சர் ஜெயில்லயே இருப்பார்.. அமைச்சர் பதவியை தூக்குங்க : பாஜக நெருக்கடி!!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2023, 2:52 pm
இன்னும் எத்தனை நாள்தான் அமைச்சர் ஜெயில்லயே இருப்பார்.. அமைச்சர் பதவியை தூக்குங்க : பாஜக நெருக்கடி!!
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவரது அமைச்சர் பதவியை பறிக்க பரிந்துரை செய்தார் ஆளுநர் ரவி. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது இலாகாக்களை மட்டும் மாற்றிக் கொடுத்துவிட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் சிறையில் இருப்பார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்ப்தி, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உடல் நிலையை காரணம் காட்டி பிணை கேட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதி மன்றம்.
பிணை கொடுக்கும் அளவிற்கு உடல்நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை என்றும் தேவையெனில் வழக்கமான பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தல். மீண்டும் புழல் சிறைக்கு செல்வாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பார் தமிழக அமைச்சர்? இது தான் திராவிட மாடலா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.