தூத்துக்குடி மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? முழு விபரத்தை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2023, 7:59 pm
தூத்துக்குடி மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? முழு விபரத்தை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!
தூத்துக்குடியில் நெடுஞ்சாலை செயலர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 60 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் அதிகமாக உள்ளதால் குடி தண்ணீர், உணவு போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தது.. இதற்காக மதுரையிலிருந்து 6 ஹெலிகாப்டர் மூலமாக பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் உணவுப் பொருட்கள் வரவலைக்கப்பட்டன.
மழை தேங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் மரங்கள் மற்றும் வீடுகளில் மேல் தளத்திலும் எங்கெல்லாம் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தங்கி இருக்கிறார்களோ அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி தாழ்வான பகுதியாக இருப்பதால் தண்ணீர் வடிவதற்கு கூடுதல் காலம் ஆகும். எனவே மின் மோட்டார் மூலமாக தேங்கியுள்ள மழை நீர் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் துண்டிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீன்வளத் துறையினர், படகு மூலமாக சென்று அந்த கிராமங்களில் உள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தாமிரபணி ஆற்றில் தண்ணீர் வரத்து முழுமையாக குறையாத நிலையில் அந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம், ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்காக இந்திய ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 25 பேரிடர் மீட்பு குழுவினர் 150 ராணுவத்தினர் தீயணைப்பு துறையினர் மீட்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்…இதுவரை 26 ஆயிரம் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.. அரசால் பிற மாவட்டங்களில் இருந்தும் உணவு பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் 5 துணை கூடுதல் ஆட்சியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்..
மேலும், ரயில் பயணிகளை வெளியே கொண்டு வந்து வருகிறோம்.. அவர்களை பள்ளி, திருமண மண்டபம் ஆகிய இடங்களில் சேர்த்து உள்ளோம்.. இந்த பணிகள் முழுமையாக முடிய ஒரு வார காலமாகும்.. தூத்துக்குடியில் உறுதியாக 3 பேர் இறந்துள்ளனர் என்றார்..
பின்னர் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளளில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது.. திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வர முடியவில்லை.. திருநெல்வேலிக்கும் செல்ல முடியாது என்ற அவர் , நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லுரிகள் விடுமுறை அளிக்கப்படுகிறதாகவும் கூறினார்.