பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? வாக்களித்த பின் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கருத்து!
மதுரையில் அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் உடன் மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தனர்.
தொடர்ந்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்து பேசுகையில், 2 வது சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிடும் அளவிற்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: விஜய் ரசிகருக்கு இப்படியொரு சோதனையா? TVK நிர்வாகியின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தியதால் பரபரப்பு!
இந்திய குடிமகன் என்கிற அடிப்படையில் வாக்களித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
400 இடங்களில் வெற்றி கிடைக்கும் என பாஜக கற்பனையில் உள்ளது.
இந்திய அளவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 220 இடங்களில் இருந்து 240 இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மத நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவைகளில் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.
தமிழ்ப்பற்று, சுயமரியாதை, கல்வி உள்ளிட்டவைகள் அடங்கிய மாநிலத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என பேசினார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.