எத்தனை வருஷம் தான் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போடுவீங்க.. மனைவிக்கு ஆதரவாக அன்புமணி வாக்கு சேகரிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2024, 2:49 pm
எத்தனை வருஷம் தான் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போடுவீங்க.. மனைவிக்கு ஆதரவாக அன்புமணி வாக்கு சேகரிப்பு!
தர்புமபுரி பா.ம.க., வேட்பாளரும், மனைவியுமான சவுமியாவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டார்.
அங்கு கூடியிருந்த மக்களிடம் அவர் பேசியதாவது: வேட்பாளரை பார்த்து மக்கள் ஓட்டளிப்பது அவசியம். மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும். எத்தனை ஆண்டுகள் தான் இரு கட்சிகளுக்கே மாறி மாறி ஓட்டு போடுவீர்கள்.
பெண்கள், குழந்தைகள் உரிமைகள் குறித்து ஐ.நா சபையில் பேசியவர் சவுமியா. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் பெண் சிங்கமாய் ஓடோடி வரும் வேட்பாளர் தான் சவுமியா.
சின்னம், ஜாதி, மதம், இனம், மொழியை பார்த்து ஓட்டு போடாமல் நல்ல வேட்பாளரை பார்த்து ஓட்டு போடுங்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.